Wednesday, February 17, 2010

பணியாளர்கள் நடக்கும் முறை

ஈரோடு ஈஸ்வரன் ப்ரோதேர்ஸ் பணியாளர்கள் கேட்டு கொண்டதன் பேரில் எழுதியது...

தொழில் கூடத்தில் பணிபுரிவோர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
அதிகம் பேசக் கூடாது. முதலாளி கேட்டால்தான் ஆலோசனை சொல்ல வேண்டும்.

பொருத்தமான சந்தர்பங்களில் முதலாளியைப் புகழ வேண்டும். எவ்வளவு சிறிய விஷயமாயினும் முதலாளியிடம் சொல்லிய பிறகு தான் செய்ய வேண்டும்.

முதலாளியிடம் அதிகம் நெருங்கக் கூடாது. இருந்தாலும் விலகுவது போல் காட்டிக் கொள்ளவும் கூடாது.

எவ்வளவு தான் முதலாளி தன்மேல் நம்பிக்கை வைத்திருந்தாலும் எந்த நேரத்திலும் தன்னை வேலையில் இருந்து நீக்கி விடுவான் என்று நினைத்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

முதலாளி மேல் அதிக நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம். முதலாளி தன் மேல் பாசத்தோடு இருபத்தாக நினைத்து அவருடைய வாகனத்திலேயோ இருக்கைலேயோ அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.

முதலாளியால் மதிக்கப்படும் போதும் புகழப்படும்போதும் இறுமாப்புக் கொள்ளக் கூடாது. அவமதிப்படையும்போது சோர்வடையக் கூடாது. தன்னிடத்தில் நம்பகமாகக் சொல்லப்பட்ட ரகசியத்தை வெளியிடக் கூடாது.

கடைக்கு வரும் வாடிக்கையாலார்களிடமிருந்து எந்த விதப் பரிசுகளையும் பெறக்கூடாது. மற்ற பணியாளர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளக் கூடாது.
மற்ற பணியாளர்களில் ஒருவனை முதலாளி தன்னுடைய ஒற்றனாக வைத்திருக்கலாம்.

முதலாளி நுண்ணறிவும் திறமையும் கொண்டவனைத் தவிர்த்து முழு முட்டாளைக் கூட அதிகாரம் நிறைந்த நிலையில் வைத்திருக்கலாம். இப்படிப்பட்ட முரண்ப்பட்ட தன்மையை மனதில் கொள்ளக் கூடாது.

கடையில் இருக்கும் பெண்களிடதும் கடைக்கு வரும் பெண்களிடத்தும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் தான் மிகவும் ஜாக்கிரதையானவன் என்பதை வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது.
மென் மையின்றி யாராவது பெண்களிடம் நடந்தால் அதைப்பற்றி சிறிதளவும் கருத்துக் கூடத் தெரிவிக்கக் கூடாது.

"செய்யும் தொழிலே தெய்வம்
திறமைதான் நமது செல்வம்"

No comments:

Post a Comment