Sunday, December 6, 2009

பிறந்த நாள் வாழ்த்து - அசோக்

என் உயிராகவும் உயிரின் உள்ளோடும்
உணர்வாகவும் விளங்குகின்ற அருமை மகன் அசோக் குமாருக்கு
அப்பா அம்மா வழங்கும் பிறந்தா நாள் வாழ்த்துக்கள்.

தமிழ் எழுத்தின் முதல் எழுத்தை தலை எழுத்தாய் கொண்டவனே
இன்று உனக்கு பிறந்த நாள்.

25 ஆண்டுகள் நிறைவு பெற்று 26 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் செல்வமே. நீ நீடூழி வாழ வாழ்த்துகிறேன்..

சீறும் சிறுத்தையே
நீ உறங்கி வெளியேறிய குகை
உன்னை வாழ்த்துகிறது

மராட்டிய மண்ணிலே தவழ்ந்து விளையாடும் தென்றலே
பால் தாக்கரே உன்னைச் சந்தித்திருந்தால்
கொள்கையை மாற்றி இருப்பார்.

எம் மண்ணிலே இருந்தாலும்
அம் மண்ணே நம் சொந்த மண் என
எண்ணி மகிழ வேண்டும்
என அன்றொரு நாள் நான் உரைத்தேன்
நினைவுண்டா உந்தனுக்கு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
நன்றும் தீதும் பிறர்தர வாரா

எனும் கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகளை
மனதிலே தேக்கியுள்ளேன் என்றாய்.

சிரித்து மகிழ்ந்தேன்
சிந்தை குளிர்ந்தேன்

பெற்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்

எனும் வள்ளுவரின் வாய் மொழிக்கு
வலு சேர்க்க வந்தவனே

கல்லாத ஏழை நான்
கண்டெடுத்த புதையல் நீ
கார்த்திகை திங்களில்
மதி நிறைந்த நன்னாளில்
என் குலம் தழைக்க வந்த
குலக் கொழுந்தே

கம்பன் புகழ் போல
கன்னித் தமிழ் போல
கங்கையின் புனிதம் போல
காவிரியின் மணல் அளவு போல

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
வாழ்வாங்கு வாழ
வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்.

இப்படிக்கு

அப்பா, அம்மா, சிவன்மலை பாட்டி
அக்கா, மச்சான், மாமா, அத்தை, ஈரோடு தாத்தா.